சென்னை

டந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரை தமிழகத்தில் 1322 பதிவு செய்யப்பட்ட  நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயங்காத நிலை ஏற்பட்டது.  இதையொட்டி அனைத்து நாடுகளிலும் வர்த்தகம் கடுமையான பாதிப்புக்குள்ளானது.  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொருளாதார பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் வரிசையில் தமிழகமும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.  கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரையிலான காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பல நிறுவனங்கள் வர்த்தக பாதிப்பால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

இவற்றில் அதிக அளவில் டில்லியில் 2394 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.  அடுத்ததாக உத்தரப்பிரதேசத்தில் 1936 நிறுவனங்களும் தமிழகத்தில் 1322 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.   நான்காம் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 1279 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.