இரு மாதங்களில் $ 25500 கோடி ஈட்டிய உலகின் மிகப் பெரிய 25 செல்வந்தர்கள்

வாஷிங்டன்

மீபத்தில் ஏற்பட்ட அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவின் போது மதிப்பு குறைந்த 25 பெரும் செல்வந்தர்கள் இரு மாதங்களில் மிகப் பெரிய செல்வந்தர்கள் ஆகி உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகெங்கும் பங்குச் சந்தைகள் க்டும் பாதிப்பு அடைந்தன. அவ்வகையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.  இதனால் பல அதிக மதிப்புள்ள பங்குகள் கடும் விலை சரிவைச் சந்தித்தன. இந்த சமயத்தில் உலகின் பெரிய செல்வந்தர்களில் 25 பேர் விலை குறைந்த பங்குகளை வாங்கி குவித்துள்ளனர்.

இவ்வாறு வாங்கப்பட்ட பங்குகளில் மதிப்பு சுமார் 1.5 லட்சம் கோடி டாலர்கள் ஆகும்.  இவற்றின் மொத்த மதிப்பானது உலகில் உள்ள மொத்த செல்வந்தர்களில் சொத்துக்களில் 16% ஆகும்.  தற்போது பங்குச் சந்தை சிறிது சிறிதாக மீண்டு வருவதால் குறைந்த விலையில் வாங்கப்பட்ட பங்குகள் மதிப்பு உயரத் தொடங்கி உள்ளது   இந்த 25 பெரிய செல்வந்தர்களும் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களாக உருவெடுத்துள்ளனர்.

இந்த 25 செல்வந்தர்களில் அதிகம் பயனடைந்தவர் முகநூல் தலைமை அதிகாரி மார்க் சுகர்பெர்க் ஆவார்.    முகநூலின் பங்குகள் கடந்த 2 மாதங்களில் 60% மதிப்பு உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று இந்த நிறுவனப் பங்குகள் மதிப்பு மிக உயரத்தை எட்டியது   சிறு சிறு பங்குகளை வாங்கிக் குவித்த மார்க் சுகர்பெர்க் தற்போது 8650 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக உள்ளவர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாச் ஆவார்.  இவர் பல சில்லறை வர்த்தகர்களின் பங்குகளை இந்த காலகட்டத்தில்  வாங்கி உள்ளார்.  கடந்த மார்ச் மாதம் இவர் வாங்கிய பங்குகளின் விலை 3000 கோடி டாலராக இருந்தது.  தற்போது அவற்றின் மதிப்பு 14690 கோடி டாலராக அதாவது 26% வரை உயர்ந்துள்ளது.

சீனாவில் அலிபாபா நிறுவனத்துக்கு அடுத்ததாக உள்ள பிண்டுடூ நிறுவனத்தை அமைத்த கோலின் ஜாங் ஹுவாங் ஆதாயம் அடைந்தவர்களில் ஒருவர் ஆவார்.  இவரும்  சிறு சிறு வர்த்தக நிறுவன பங்குகளை  வாங்கியதில் தற்போது அவற்றின் மதிப்பு இருமடக்காக உயர்ந்துள்ளது.   அந்த சதவிகித உயர்வின்படி பார்த்தால் இவருக்கு அதிக சதவிகிதம் லாபம் கிடைத்துள்ளது.   இவர் வாங்கிய 17900 டாலர் மதிப்புள்ள பங்குகளின் மதிப்பு தற்போது 35600 டாலராக உயர்ந்துள்ளது.

இரு மாதங்களில் மதிப்பு உயர்ந்தோரில் குறிப்பிடத்தக்க மற்றொரு செல்வந்தர் முகேஷ் அம்பானி ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் இவரது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளில் 5700 கோடி டாலர் முதலீடு செய்வதாக முகநூல் அறிவித்தது.  அதன்பிறகு மேலும் பல புகழ்பெற்ற நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்யத் தொடங்கின. இவற்றின் மூலம் நிறுவனத்துக்கு 1000 கோடி டாலர் முதலீடு அதிகரித்தது.  தற்போது இந்த நிறுவனப் பங்குகளின் மதிப்பு 2000 கோடி உயர்ந்து 52700 கோடி டாலர்களாகி உள்ளன.

சொல்லப்போனால் மார்ச் 23 ஆம் தேத்க்க்கு பிறகு எந்த ஒரு நிறுவனமும் கீழிறங்கவில்லை எனவே சொல்லலாம்.   இவற்றில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் மதிப்புக்கள் அதிக அளவில்  உயரத் தொடங்கி உள்ளன.  கடந்த ஏப்ரல் மாத இடையில் இந்த நிறுவன பரிவர்த்தனை அமெரிக்க வங்கி கணக்கில் அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.    இந்நிறுவனத்தின் மூன்று உரிமையாளர்களின் மதிப்பு சுமார் 16500 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளன.