கொரோனா : ஒரே நாளில் சென்னையில் 191 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு

சென்னை

டந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1875 பேருக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதில் சென்னையில் மட்டும் 1407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27398 ஆகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 70 பேரும் திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மருத்துவமனையில் 20 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி