ராகுல் காந்தி டிவிட்டர் கணக்கு : ஆறு மாதத்தில் மேலும் 10 லட்சம் அதிகரிப்பு

டில்லி

றே மாதங்களில் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கை  பின்பற்றுவோர் எண்ணிக்கை மேலும் 10 லட்சம் அதிகரித்துள்ளது.

தற்போது உலகெங்கும் உள்ள பல பிரபலங்கள் சமூக வலை தளமான டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.   பல நேரங்களில் தங்கள் கருத்துக்களை இந்த டிவிட்டர் பதிவின் மூலம் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.  ஆகையால் பிரபலங்களை பின்பற்றுவோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது..

அவ்வகையில் டிவிட்டரில் உலக அளவில் இந்திய பிரபலங்களில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.  அதன் பிறகு சல்மான் கான் மற்றும் மூன்றாம் இடத்தில் பிரதமர் மோடி உள்ளார்.    கடந்த 2009 ஜனவரி மாதம் முதல் மோடி  டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளார்.   இதுவரை 21,826 பதிவுகளை அவர்  பதிந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2015 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் டிவிட்டரில் இருந்து வருகிறார்.    தற்போது ராகுல் காந்திக்கு டிவிட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   மோடியுடன் ஒப்பிடும் போது ராகுல் காந்தியின் பின்பற்றுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ள போதிலும் சமீபகாலமாக அவருடைய பின்பற்றுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ராகுல் காந்தியை பின்பற்றுவோர் எண்ணிக்கை அதற்கு முன்பு இருந்ததை விட மேலும் 10 லட்சம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   அதிலும் இந்த மாதம் மட்டும் 2 லட்சம் பேர் கூடுதலாக பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரசின் வெற்றிக்கு பிறகு  ராகுல் காந்தியை பின்பற்றுவோர் எண்ணிக்கை கிடுகிடு என உயர்ந்துள்ளது.

Thanx : Money control.com

கார்ட்டூன் கேலரி