டில்லி

ம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சோம் தத் ஆறு மாத சிறை தண்டனை பெற்றுள்ளார்.

டில்லி சட்டப்பேரவை ஆம் ஆத்மி உறுப்பினர்கள் சிறை தண்டனை பெறுவது தொடர்ந்து வருகிறது. டில்லியில் கோண்டிலி தொகுதியின் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினரான மனோஜ் குமார் மீது தேர்தல் நடக்கும் போது  குறுக்கிட்டு தடை செய்ததாக வழக்கு உள்ளது. கடந்த வாரம் இந்த வழக்கில் அவருக்கு மூன்று மாத சிறை தண்டனை வழங்கபட்டது.  இந்த வாரம் மற்றொரு உறுப்பினர் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

சோம் தத் என்பவர் தற்போது சாதர் பஜார் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அவர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகும் முன்பு 2015 ஆம் வருடம் ஜனவரி மாதம் சஞ்சீவ் ராணா என்பவரின் வீட்டுக்கு 50-60 நபர்களுடன் சென்றுள்ளார். குலாபி பாக் பிளாட்டில் அமைந்துள்ள ராணாவின் வீட்டுக் கதவை இவர்கள் ஓயாமல் தட்டி உள்ளனர்.

வெளியே வந்த ராணாவை அவர்கள் இழுத்துப் போட்டு அடித்து உதைத்துள்ளனர். ராணாவை சோம் தத் பேஸ்பால் மட்டையால் காலில் தாக்கி உள்ளார். இது குறித்து ராணா உடனடியாக புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் சோம் தத் தாம் குற்றமற்றவர் எனவும் பாஜக தனது உறுப்பினர் பதவியை பறிக்க இவ்வாறு சதி செய்ததாகவும் கூறி உள்ளார்.

வழக்கு விசாரணையில் ராணா எவ்வித கட்சியையும் சேராதவர் என்பதும் முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததும் தெரிய வந்தது. மேலும் ராணா தரப்பு சாட்சியங்கள் சோம் தத் அவரை தாக்கியதை நிரூபித்தனர். ஆனால் சோம் தத்துக்காக வாதாடிய ஆம் ஆத்மி சட்ட வல்லுனர்களால் இந்த வழக்கு பொய் வழக்கு என நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சமார் விஷால் கடந்த ஜுன் 29 அன்று சோம் தத் குற்றவாளி என தீர்ப்பளித்தார். இன்று அவர் சோம் தத் ஆறு மாத சிறை தண்டனை வழங்கி ரூ. 2 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.  சோம்நாத்தை ஜாமீனில் விடுவித்து அவ்ர் மேல் முறையீடு செய்துக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளார்.