இந்த மாதத்திற்குள் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள்! செங்கோட்டையன்

சென்னை,

மிழகத்தில்  இந்த மாத இறுதிக்குள் மாணவர்களின் வசதிக்காக  412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன்  கூறி உள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு மத்திய அரசின் மருத்துவ நுழைவு தேர்வான  நீட் தேர்வு அமல்படுத்தியதன் காரணமாக, தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவ மாணவிகள் கடும் பாதிப்புக்கு ஆளானானர்கள்.

இதன் காரணமாக 1176 மதிப்பெண் பெற்ற மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தீமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றப்படும் என்றும், நீட் தேர்வு போன்ற தேசிய தேர்வுக்கு தயாராகும் வகையில் பயிற்சி அளிக்க பயிற்சி மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், நீட் குறித்து தமிழக அமைச்சர்கள் எந்த கருத்தும் கூறக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்த நிலையில், தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இந்த மாத இறுதிக்குள் மாணவர்களின் வசதிக்காக  412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன்  கூறி உள்ளார்.