வாகனம் நிறுத்த இடமில்லாத ஓட்டல்களை உடனே மூடு! ஐகோர்ட்டு அதிரடி

--

சென்னை,

வாகனங்கள் நிறுத்த இடமில்லாத ஓட்டல்களை உடனே மூட சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரரவு பிறப்பித்து உள்ளது.

சென்னையைச் சேர்ந்த லோகு என்பவர் சென்னை  உயர் நீதிமன்றத்தில் ஓட்டல்களில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்குவதில்லை என பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

சென்னையைச் சேர்ந்த பெரும்பாலான உணவகங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லை. இதன் காரணமாக வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன.  இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  இது தொடர்பாக பலமுறை உணவகங்களுக்கு  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என கூறிய நீதிபதி, இது தொடர்பாக ஏன்  மேல்நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை என்று கேள்வி எழுப்பியது.

அதைத்தொடர்ந்து,  சென்னையில் வாகன நிறுத்த வசதிகள் இல்லாத உணவகங்களை  உடனே மூட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

You may have missed