வாரண்ட் இல்லாமல் சோதனை! மத்தியஅரசு மீது ராம மோகன் ராவ் சரமாரி குற்றச்சாட்டு!

சென்னை,

தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் இன்று பகல் 10.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவரர் மத்திய அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறினார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், தலைமை செயலகத்திற்குள் வருமான வரித்துறையினர் நுழைந்திருக்க முடியுமா என்று கேள்வி விடுத்தார்.

தனது வீட்டில் நடைபெற்ற ரெய்டு குறித்து  செய்தியாளர்களிடம் ராமமோகன் ராவ் கூறியதாவது,

மத்தியஅரசின் வருமான வரிதுறையினர் என வீட்டில் சோதனை நடத்தினார். ஆனால், சர்ச் வாரன்டில் எனது பெயரே இல்லை. எனது மகன் பெயர்தான் இருந்தது.

அதை வைத்து எனது வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். மேலும் தலைமைசெலயகத்தில் உள்ள எனது அறையையும் சோதனையிட்டனர்

நான் ஒரு மாநிலத்தின் தலைமைசெயலாளர் நான்.  எனது வீட்டில் சோதனை நடத்த வேண்டுமானால், தமிழக முதல்வர் மற்றும், உள்துறை செயலாளரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் என்வீட்டை சோதனையிட்டனர்.

வீட்டை சுற்றி மத்திய ரிசர்வ் படையினரை காவலுக்கு நிறுத்திவிட்டு என்னை வீட்டுக்காவலில் சிறை வைத்தனர். துப்பாக்கி முனையில் எனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் எனது மகன் இந்த வீட்டில் ஒரு வாரம் கூட தங்கியிருந்தது இல்லை. எனது வீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால், வருமான வரித்துறையினர்,  எனது  வீட்டில் இருந்து 1,12,300 ரூபா யைத் தான் கண்டு பிடித்தார்கள். மேலும்  எனது மனைவி மற்றும் மகளுடைய  40 முதல் 50 சவரன்  தங்க நகைகளை எடுத்தனர்.

மேலும் பூஜை அறையில் இருந்த சுமார் 20 கிலோ பெறுமானமுள்ள சிறுசிறு கடவுள் சிலைகள் போன்ற வெள்ளிப்பொருட்களையும் கைப்பற்றினர்.

அவர்கள் எனது வீட்டில் கைப்பற்றிய பொருட்கள் குறித்த நகல் என்னிடம் உள்ளது. அதை உங்களுக்கு தருகிறேன் என்றார்.

மேலும், நான் ஒரு மாநிலத்தின் தலைமை செயலாளர். என்மீதான தாக்குதல் என்பது அரசியல் சாசனத்தின்மீதான தாக்குதலுக்கு சமம்.

நாதான் இன்னும் தமிழகத்தின் தலைமை செயலாளர். எனது பணியை நிறுத்தி வைப்பதற்கான எந்தவிதமான அதிகாரப்பூர்வமாக கடிதமும் எனக்கு இன்னும் வரவில்லை. ஆகவே நானே தலைமை செயலாளராக நீடிக்கிறேன் என்றார்.

32 ஆண்டுகள் பணியாற்றிய ias அதிகாரி என் வீட்டில் வந்தது ஏன் ? அம்மா இருந்தால் இது நடந்து இருக்குமா ?..மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.. என் மீது நடவடிக்கை எடுத்த பிறகு வந்து இருக்க வேண்டும்..

என்மீதான தாக்குதலில் இருந்து என்னை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது என்று அரசுமீது குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல் நடைபெற்றிருக்குமா? அவர்தான் விட்டிருப்பாரா என்று கேள்வி விடுத்தார்.

தமிழக அரசின் தலைமைசெயலகத்தில் உள்ள தலைமைசெயலாளர் அறைக்குள் எப்படி சோதனை நடத்த முடியும்?  ஒரு மாநில அரசின் தலைமை செயலாளர் அறையில், அரசின் அனுமதியின்றி எப்படி சோதனை நடத்த முடியும்.  என்னுடைய அலுவலக அறையில் ரகசிய விசாரணைக் கோப்புகள் இருந்தன. அவற்றையெல்லாம் பார்க்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

மாண்புமிகு அம்மா இருந்திருந்தால் இவர்களுக்கெல்லாம் தலைமைச் செயலகத்தில் நுழையும் தைரியம் இருந்திருக்குமா?

நான் 1994-ம் ஆண்டு செங்கல்பட்டு ஆட்சியராக இருந்தது முதல் என்னை ஜெயலலிதாவுக்கு தெரியிம். அதுமுதலே நான்  தயார் படுத்தப்பட்டு வந்தேன். தலைமை செயலாளரான எனக்கே இந்த நிலை என்றால்.. ஏனைய அரசு அதிகாரிகளின் நிலை என்ன?  

அப்படி என் மீது தேடுதல் வேண்டுமென்றால் முதலமைச்சர் 2 நிமிடங்களில் என்னை மாறுதல் செய்திருக்கலாம். அதன் பிறகு தேடுதல் வேட்டை நடத்தியிருக்கலாம்.

மத்திய ரிசர்வ் போலீசாரால் நான் 26 மணி நேரம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டருந்தேன். இது தமிழகத்திற்கே தலைகுணிவு. இதுவரை இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலாவது நடந்திருக்கிறதா?

சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே பதில் சொல்லுங்கள். மத்திய ரிசர்வ் படை எப்படி என் அலுவலகத்தில் நுழையலாம்?

என் மருமகள் ராமசந்திரா மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கிருந்த என் மகனை துப்பாக்கி முனையில் வெளியில் இழுத்துச் சென்றிருக்கிறார்கள். என் வீட்டிற்குள்ளும் துப்பாக்கி முனையில் தான் நுழைந்தார்கள்.

என் உயிருக்கு மத்திய அரசால் ஆபத்து உள்ளது.

மேலும், என்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, மற்றும் தமிழக எம்.பி., எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தீரன் மற்றும் ஆதரவு தெரிவத்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.