நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதியை கொலை செய்தவனை பிடிக்க காவல்துறை எட்டு தனிப்படை அமைத்து தேடி வருகிறது.   கொலையாளியின் சி.சி. டிவி. கேமரா படத்தையும் வெளியிட்டுள்ளது. சுவாதி குடும்பம், நண்ர்கள், அலுவலகத்தினர் என்று பல தரப்பினரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுவாதியை கொன்றவன் பிடிபட்டுவிட்டதாக  இன்று மதியம் தகவல் ஒன்று உலவ ஆரம்பித்தது. இதற்கிடையே சுவாதி  கொலையை பார்த்தவர் காவல்துறையில் தகவல் அளித்துள்ளார்.
அவர்,  “இதற்கு முன்பு ஒருமுறை இதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதியை ஒருவர் கடுமையாக அடித்தான். அப்போது சுவாதியின் செல்போன் கீழே விழுந்தது. எந்த வித ரியாக்சனும் இல்லாமல், அந்த செல்போனை எடுத்துக்கொண்டு சுவாதி ரயிலில் ஏறிச் சென்றுவிட்டார்” என்று புதிய தகவலைத் தெரிவித்துள்ளார்.
கொலை நடந்த அன்றும் தான் ரயில் நிலையத்தில் இருந்தாதக தெரிவித்த அவர், “ வழக்கமாகவே நான் காலை நேரத்தில் நான்காவது கம்பார்ட்மெண்ட்டில் ஏறுவேன். சுவாதி ந்தாவதுகா இருக்கும் பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஏற காத்திருந்தார். அப்போது ஐந்தாறு பயணிகள்தான் இருந்தோம்.
சுவாதி கொலைக
அப்போது திடீரென “பட் பட்” என்று சத்தம் கேட்டது. விநாடி நேரம்தான்.. சுவாதியின் தாடையில் வெட்டினான். அந்த பெண் கீழே விழுந்தார். கொலைகாரன் ஓடிவிட்டான். யாரோ ஒருவர் கொலைகாரனை துரத்திக்கொண்டு ஓடினார். ஆனால் பிடிக்க முடியவில்லை.
சரி, அவன் சரண் அடைந்துவிடுவான் என்று நினைத்து நாங்கள் பேசிக்கொண்டோம்” என்று சொல்லியிருக்கிறார்.
மேலும், “போலீஸ் வெளியிட்டுள்ள சிசி டிவி கேமராவில் இருப்பவனை போலவே இருந்தான்.  இந்த தகவல்களை நானே முன்வந்து துணை கமிசனரிடம் தெரிவித்தேன்” என்றும் தெரிவித்திருக்கிறார் அந்த நபர்.