கருணாநிதியின் 95ஆவது பிறந்தநாளான இன்று hbdkalaignar95 என்ற  ;ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு இன்று 95வது பிறந்த நாள். இதனை முன்னிட்டு, திமுக தலைவர் கருணாநிதிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளங்களில் HBDKalaignar95 என்ற பெயரில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

சமூக வலைத்தளங்களில் இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது.

hbdkalaignar95 என்ற ஹேஷ்டேகில் கருணாநிதிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்பட பலர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.