சபரிமலை : 50 வயதை தாண்டிய பெண்ணுக்கும் அனுமதி மறுப்பு

பரிமலை

னது பேரனுக்கு பிரார்த்தனை செய்ய சபரிமலை வந்த 50 வயதை தாண்டிய பெண்ணை சன்னிதானம் செல்ல விடாமல் தடுத்த 150 பேர் மீதுவழக்கு பதியப்பட்ட்டுள்ளது.

சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தர்விட்ட போதிலும் அதை எதிரித்து கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்ற மாதம் நிகழ்ந்த ஐப்பசி மாத நடைதிறப்பின் போது வந்த இளம் பெண்கள் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது சபரிமலையில் சித்திரை ஆட்ட திருநாளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது.

மலையாள மக்களிடையே குழந்தைகளுக்கு முதல் உணவாக சாதம் ஊட்டும் அன்னப் பிராசனம் கோவிலில் நடத்தும் பழக்கம் உள்ளது. குருவாயூர், சபரிமலை உள்ளிட்ட கோவில்களில் இந்த பிரார்த்தனை நடப்பது வழக்கம் ஆகும். தனது பேரனுக்கு அவ்வாறு உணவளிக்க லலிதா என்னும் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார். சுமார் 52 வயதைத் தாண்டிய இவருடன் இவரது வயதன உறவுப் பெண்களும் வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் சன்னிதானம் செல்லும் 18ஆம் படிக்கு சற்று முன்னரே ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். லலிதா பார்க்க 50 வயதைத் தாண்டியது போன்ற தோற்றத்தில் இல்லை எனக் கூறி அவரை மேலே பயணத்தை தொடர அனுமதிக்காமல் தடுத்துள்ளனர். தனக்கு 52 வயதுக்கு மேல் ஆவதாக லலிதா கூறியதை அவர்கள் நம்ப மறுத்துள்ளனர்.

அந்த கும்பலில் சிலர் லலிதாவை தாக்க முற்பட்டுள்ளனர். இதற்கிடையில் காவல்துறையினர் குறுக்கிட்டுள்ளனர். ஆயினும் போராட்டக்காரர்கள் லலிதாவை அங்கிருந்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவ சோதனை மற்றும் ஆவணங்கள் மூலம் வயதை நிரூபித்த பின்னர் லலிதா சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் லலிதாவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் உறவுக்காரப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லலிதா செய்தியாளர்களிடம், “நான் பலரிடம் விசாரித்த போது 50 வயதைத் தாண்டிய பெண்களுக்கு அனுமதி உண்டு எனக் கூறினார்கள். அதனால்தான் நான் என் பேரனுக்கு அன்னப் பிராசனம் செய்ய அழைத்து வந்தேன். நான் இது குறித்து எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை” எனக் கூறி உள்ளார்.

லலிதாவிடம் தகராறு செய்ததாக 150 பேர் மீதி காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.