ன்னியாபுரம், திருவள்ளூர் மாவட்டம்

ட்டு வருடங்களாக கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட வரலட்சுமி என்னும் பெண் கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்

திருவள்ளூர் மாவட்டம் கன்னியாபுரம் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர் வரலட்சுமி.   இவரும் இவர் கணவர் கோபால் என்பவரும் அருகில் இருந்த ஒரு அரிசி மில் அதிபரிடம் ரூ.10000 கடன் வாங்கி இருந்தனர்.   அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் வரலட்சுமி, கோபால் மற்றும் அவரது மகள் ஆகியோர் அதே மில்லில் கொத்தடிமைகளாகப் பணி புரிந்து வந்தனர்.

அவர்களிடம் ஏராளமான வேலைகள் வாங்க்பட்டுள்ளது.   நெல் வேக வைப்பதில் இருந்து அரிசியாக்கி மூட்டை கட்டுவது வரை அனைத்துப் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.   இவ்வாறு 8 ஆண்டுகள் கழிந்த பிறகு அவர்களையும் அங்கிருந்த மற்ற கொத்தடிமைகளையும் அரசு அதிகாரிகள் மீட்டனர்.

அதன் பிறகு வரலட்சுமி கோபால் தம்பதியர்கள் சொந்தத் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.    தற்போது கன்னியாபுரம் கிராம  பஞ்சாயத்துத் தேர்தலில் வார்டு கவுன்சிலராக போட்டியிட வரலட்சுமி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.   வரலட்சுமியின் இனமான இருளர் இனத்தில் இவரே தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் ஆவார்.  தமக்கு வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கை உள்ளதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.