ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை எரித்த கொழுந்தனார்!

துன், உ. பி.

னது ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஒரு வாலிபர் தனது அண்ணியை உயிருடன் எரித்துள்ளார்.

உத்திரபிரதேசம் பதுன் மாவட்டத்தில் லபரி என்னும் சிற்றூர் ஒன்று உள்ளது.   மிகவும் சிறிய இந்தக் கிராமத்தில் நீலம் என்னும் 27 வயதுப் பெண் ஒருவர் வசித்து  வருகிறார்.   இவர் கணவனை இழந்தவர்.   நேற்று இரவு இவர் தனியாக இருந்துள்ளார்.

அந்தச் சமயத்தில் நீலத்தின் கணவரின் சகோதரர் ஜிதேந்திரா என்பவர் இவர் வீட்டுக்குள் புகுந்துள்ளார்.    தனியாக இருந்த நீலத்தை ஜிதேந்திரா பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.   ஆனால் அவருடைய ஆசைக்கு இணங்காமல் நீலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   கோபம் அடைந்த ஜீதேந்திரா நீலத்தை உயிருடன் எரித்துள்ளார்.   நெருப்பு பற்றியதால் அங்கேயே நீலம் மரணம் அடைந்துள்ளார்.

அண்ணியை எரித்த ஜிதேந்திரா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.    நீலத்தின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.   வழக்கு செய்த போலீசார் ஜிதேந்திராவை தேடி வருகிறார்கள்