கணவன் கள்ளக் காதலை நியாயப்படுத்தியதால் மனைவி தற்கொலை

சென்னை

ணவன் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி தனது கள்ளக் காதலை நியாயப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்திய குற்றவியல் சட்ட எண் 497 இன் படி திருமணத்தை மீறிய உறவு குற்றமாக கருதப்பட்டு வந்தது.   இவ்வாறு ஒரு கணவன் கள்ளக் காதல் கொண்டிருந்தால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கலாம் என அச்சட்டத்தில் உள்ளது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கள்ளக்காதல் குற்றமல்ல என தீர்ப்பளித்தது.  இதற்கு நாடெங்கும் பலர் எதிர்த்து வந்தனர்.   ஆனால் இந்த தீர்ப்பு ஒரு பெண்ணின் மரணத்துக்கு  தற்போது காரணமாகியுள்ளது.

இதோ அந்தப் பெண்ணின் சோகக்கதை

சென்னை நொசப்பாக்கம் பாரதி நகரில் வசித்து வருபவர் புஷ்பலதா.  சுமார் 24 வயதான இவர் இரு வருடங்களுக்கு முன்பு ஜான் பால் பிராங்கிளின் என்னும் 27 வயது இளைஞரை காதல் திருமணம் புரிந்தார்.   இந்த திருமணத்துக்கு இரு வீட்டாரும் ஒப்புதல் அளிக்கவில்லை.  இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.  பிராங்கிளின் அருகிலுள்ள அரசு பூங்காவில் வாட்ச்மேன் பணி புரிகிறார்.

புஷ்பலதா டிபி நோயால் பாதிக்கப்பட்டார்.   இதற்கு பிறகு அவர் கணவர் அவரை விட்டு விலக தொடங்கி உள்ளார்.   அவருடைய சிகிச்சைக்கும் குடும்ப செலவுகளுக்கும் பணம் தராமல் இருந்துள்ளார்.    இதை ஒட்டி இருவருக்கும்  சண்டை ஏற்பட்டுள்ளது.   புஷ்பலதா தனது கணவரின் நண்பரிடம் இது குறித்து கூறி உள்ளார்.   அப்போது பிராங்கிளினுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் அவர் தனது கணவருடன் சண்டை இட்டுள்ளார்.  கணவரின் கள்ளக் காதல் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப் போவதாக மிரட்டி உள்ளார்.  அதற்கு பிராங்கிளின் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தாம் குற்றவாளி இல்லை எனவும் அதனால் அவரால் தன் மேல் வழக்கு தொடர முடியாது எனவும் பதில் அளித்துள்ளார்.

இந்த பதிலால் புஷ்பலதா மனம் உடைந்துள்ளார்.   கடந்த சனிக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.   அக்கம் பக்கத்தினர் இதை காலையில் பார்த்ததும் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.    காவல்துறையினர் பிராங்கிளினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கள்ளக் காதல் குற்றமில்லை எனினும் அதனால் யாராவது தற்கொலை செய்துக் கொண்டால் தற்கொலைக்கு தூண்டிய குற்றத்தின் கீழ் கள்ளக் காதலில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.