விசால் குறித்து மீ டூ புகார் கூறிய பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு! எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்!

--

டிகர் விஷால்  மீது முகநூலில்  மீ டூ புகார் தெரிவித்த பெண்மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திரைப்பாடகி சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் சமூக வலைத்தளங்களில் திரைப் பிரபலங்கள் மீது ‘மீடூ’ வில் பாலியல் புகார்களை  தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், திரையுலகில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு குழுவை அமைத்தார் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விசால்.

இந்த நிலையில், கோபாலபுரத்தைச் சேர்ந்த விஸ்வதர்ஷினி என்பவர் தனது முகநூலில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், “ நடிகர் விசால், சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அதிகாலை 2 மணிக்கு வந்தார். பிறகு  4 மணியளவில் பின் வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து ஓடியது ஏன்? எதற்காக அங்கே வந்தார்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆதாரமில்லாமல் இப்படி கூறலாமா என்று சிலர் கேட்டனர். அதற்கு சிசிடிவி காட்சிகள் இருக்கின்றன என்றார்.

இந்த நிலையில் குறிப்பிட்ட கோபாலபுரம் வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி, “விஸ்வதர்சினி பாலியல் ரீதியாக தன்னைப்பற்றி முகநூலில் எழுதியுள்ளார்” தேசிய குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில்  அந்த சிறுமியிடம் ராயப்பேட்டை மகளிர் காவல் நிலைய காவலர்கள், வாக்கு மூலம் பெற்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விஸ்வதர்சனி ஆதாரமின்றி புகார் கூறியது தெரியவந்தது.  இதையடுத்து அவர் மீது ராயப்பேட்டை மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.