பெண் காவலர் தற்கொலை

சென்னை:

சென்னையில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொத்தவால் சாவடி காவல் நிலையத்தில் கிரேட் ஒன் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் ஹேமப்ரியா. இவர் புளியந்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

IMG-20160627-WA0027

இன்று மதியம், தனது வீட்டில் விஷம்  அருந்தி தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து உடலை மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். தற்போது அவரது உடல், போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக கே.எம்.சி. மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில்,. கடன் தொல்லை காரணமாக ஹேமப்பிரியா தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.