கீழே விழுந்த பெண்ணை உயிருடன் கடித்து தின்ற பன்றிகள்!

வலிப்பு நோயால் கீழே விழுந்த பெண்ணை பன்றிகள் உயிருடன் தின்ற அதிர்ச்சி சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.

pig

மத்திய ரஷ்யாவில் உள்ள உட்மர்ஷியா என்ற நகரத்தில் உள்ளது மலோபர்கின்ஸ்கை மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள பெண் ஒருவர் ஏராளமான பன்றிகளை கூடாரம் அமைத்து வளர்த்து வந்துள்ளார். அந்த பண்ணையில் வேலை செய்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் கூடாரத்தில் இருக்கும் பன்றி உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்காக இரவு நேரத்தில் வெளியே சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு வலிப்பு நோய் வரவே பன்றிகள் நிறைந்த கூடாரத்தினுள் விழுந்துள்ளார். கீழே விழுந்த அந்த பெண்ணை அங்கிருந்த பன்றிகள் கடித்து தின்றுள்ளன. தலை, காது, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளை பன்றிகள் கடித்து தின்றதால் அதிக ரத்தம் வெளியேறி அந்த பெண் இறந்துள்ளார். அடுத்த நாள் தனது மனைவி கூடாரத்தினுள் இறந்து கிடப்பதை பார்த்த கணவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பெண் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பன்றிகள் கடித்து தின்று ஒருபெண் உயிருடன் இறந்திருப்பது இதுவே முதல் முறை என அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.