பலாத்காரம் செய்ய வந்தவனிடம் எச் ஐ வி இருப்பதாக கூறி தப்பிய பெண்

வுரங்காபாத்

லாத்காரம் செய்ய முற்பட்ட ஜாமீனில் வந்த கொலைக் குற்றவாளியிடம் தனக்கு எச் ஐ வி பாசிடிவ் தாக்கம் உள்ளதாக கூறி ஒரு பெண் தப்பி உள்ளார்.

அவுரங்காபாத் நகரில்  கிஷோர் வியாஸ் அவகாத் என்னும் 22 வயது இளைஞன் வசித்து வருகிறான்.  இவன் தனது தந்தையைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளான். கடந்த மாதம் 25 ஆம் தேதி அன்று வாலுஜ் என்னும் சிற்றூரில் வசிக்கும் ஒரு 29 வயது விதவைப் பெண் தனது 7 வயது மகளுடன் அவுரங்காபாத் நகருக்கு சில பொருட்கள் வாங்க வந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பணம் அனைத்தும் தீர்ந்து போய் அவரிடம் ரூ.10 மட்டுமே இருந்துள்ளது. அந்த வழியாக சென்ற ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களிடம் ரூ.10 வாங்கிக் கொண்டு தன்னையும் தனது மகளையும் ஊரில் கொண்டு போய் விடச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் யாரும் அவரை அழைத்துச் செல்ல மறுத்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக கிஷோர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளான்.   கிஷோர் அந்த பெண்ணை ஊரில் விடுவதாக சொல்லி வண்டியில் ஏற்றிக் கொண்டு ஒதுக்குப் புறமான இடத்துக்கு கூட்டி சென்று கத்தியைக் காட்டி மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.. அந்த விதவைப் பெண் சாமர்த்தியமாக தனக்கு எச் ஐ வி பாசிடிவ் தாக்குதல் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால் கிஷோர் அங்கிருந்து சென்று விட்டான்.

அதன் பிறகு அங்கிருந்த காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அதை ஒட்டி கிஷோர் மீது கடத்தல் மற்றும் பலாத்கார முயற்சி பிரிவுகளில் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாகி உள்ள கிஷோரின் புகைப்படம் காவல்துறையினரிடம் இல்லாததால் அந்தப் பெண் கூறிய அடையாளங்களை வைத்து ஒரு படம் ஒன்று வரையப்பட்டு அவனை  தேடி வருகின்றனர்.