பெண் செய்தியாளர் செய்தி அளிக்கும்போது மயங்கி விழுந்து காயம்!

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பெண் செய்தியாளர் ஒருவர் நேரலையில் செய்தி அளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

நேரலையாக செய்தி வெளியாகி கொண்டிருந்த வேளையில், செய்தியாளர் மயங்கி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

பாகிஸ்தான் நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்றியல் பணியாற்றிய  பெண் செய்தியாளர் ஒருவர், செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் இருந்து பரபரப்பாக நேரடி ஒளிபரப்பில் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென்று அவரது கண்கள் செருக மயங்கி கீழே விழுந்தார். அவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததால் அவர் இறந்துவிட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

அதில், அவர் கீழே விழுந்ததால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், திடீர் மயக்கம் காரணமாக அவர் கீழே விழுந்துள்ளதும் தெரிய வந்தது.

இந்த வீடியோ தற்போது. சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

 

You may have missed