மனம் கவர்ந்த ஐபிஎஸ் அதிகாரியை சந்திக்க போலீசாரை பாடாய்படுத்திய பெண்

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகர போலீஸ் எஸ்.பி.யாக இருப்பவர் சச்சின் அதுல்கர். 34 வயதாகும் ஐபிஎஸ் அதிகாரியான இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் வைரலானது. இவரது கட் டுமஸ்தான கைகளை பார்த்து மயங்கிய பஞ்சாப் மாநிலம் ஹோஷியர்பூரை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் எஸ்பி.யை நேரில் காண முடிவு செய்தார்.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு உஜ்ஜைனுக்கு வந்த பெண் போலீசாரிடம் எஸ்பி.யை பார்க்க வேண்டும் என்று தெரிவித்து அடம்பிடித்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக அவருக்கு எல்சிடி டிவி, ஏர் கூலர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து கவனித்து வந்தனர். ஆனால் அவர் சமாதானம் அடையாமல் எஸ்.பி.யை பார்த்தே தீர வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.

அதோடு ஆத்திரத்தில் சோதனை சாவடியில் இருந்த பர்னிச்சர்களையும் அடித்து உடைத்தார். அவரது லேப்டாப்பையும் தண்ணீரில் விசி எறிந்தார். அந்த பெண்ணை நேரில் பார்ப்பதை எஸ்.பி. தவிர்த்தார். இதனால் அந்த பெண்ணை கையாள போலீசார் படாதபாடு பட்டனர். இறுதியில் கழிப்பிடத்துக்குள் சென்று உள்புறமாக தாழ் போட்டுக் கொண்டார். பின்னர் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு சமாதானம் ஏற்ப டுத்தினர்.

அந்த பெண்ணின் சகோதரர்களை வரவழைத்து அவர்களிடம் அப்பெண்ணை போலீசார் ஒப்படைத்தனர். ஆனால், அவர்களுடன் செல்ல ஆரம்பத்தில் மறுத்த அந்த பெண்ணை போலீசார் மல்லுக்கட்டி ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். எங்கே வேறு ஏதேனும் ஒரு ரெயில் நிலையத்தில் குதித்து அந்த பெண் மீண் டும் வந்துவிடுவாரோ? என்ற அச்சத்தில் போலீசார் உள்ளனர்.

வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவருக்கும் இந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால், அவருடன் வெளிநாடு செல்ல இந்த பெண் மறுத்துவிட்டார். அதனால் திருமண முறிவு ஏற்பட்டுவிட்டது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக வேலைக்கு சென்று அவரது சொந்த காலில் வாழ்ந்து வருகிறார். சமூக வலை தளத்தில் எஸ்பி சச்சின் அதுல்காரின் புகைப்படத்தை ஒருநாள் பார்ததுவிட்டு உஜ்ஜைனுக்கு புறப்பட்டு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.