அங்கன் வாடி மையத்துக்கு மகனை அனுப்பும் ஐஏஎஸ் அதிகாரி

மோலி, உத்தரகாண்ட்

ஏ எஸ் அதிகாரியும் சமோலி மாவட்ட நீதிபதியுமான ஸ்வாதி படோரியா தனது மகனை அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.

அங்கன் வாடி மையம் என்பது நமது தமிழ் நாட்டில் உள்ள சத்துணவு மையம் போன்றதாகும். அரசால் நடத்தப்படும் இந்த அங்கன்வாடி மையங்களில் பொதுவாக ஏழை மக்கள் மட்டுமே தங்கள் குழந்தைகலை சேர்த்து வந்தனர். இந்த வழக்கத்தை ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி மாற்றி உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது கோபேஷ்வர் என்னும் பகுதி. சமோலி மாவட்ட நீதிபதியாக பணிபுரியும் ஸ்வாதி படோரியா ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரியும் ஆவார். இவர் தனது மகனை கோபேஷ்வரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளர்.

இது குறித்து மாவட்ட நீதிபதி ஸ்வாதி கூறுகையில், “அரசு தரப்பில் நடத்தப்படும் அங்கன்வாடி மையங்களில் எல்லா வசதிகளும் உள்ளன. அங்குள்ள குழந்தைகளுக்கு நல்ல உணவு, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக வளருகின்றனர் அதனால் தான் நான் என் மகனை அங்கு சேர்த்தேன்” என தெரிவ்த்துள்ளார்.