நியூயார்க்:

மெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை மீறி ஏறியது தொடர்பான வழக்கில், சிலை மீறி ஏறி பார்த்த பிறகுதான் தீர்ப்பு வழங்குவேன் என வழக்கை விசாரித்த நீதிபதி அரசிடம் அனுமதி வாங்கி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா சுதந்திரம் பெற்று நூறாண்டுகள் ஆனதையொட்டி,  நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டது.

சுதந்திரதேவி சிலையின் மீது ஏறிய பெண்… தாஜா செய்யும் போலீசார்….

இந்த சிலை மீது கடந்த ஆண்டு ஜூன் மாதத்த்தில்  தெரஸா ஒக்குமூவ் என்ற பெண்  சிலையின் மீது ஏற முயன்றார். கொஞ்ச தூரம் ஏறிய நிலையில், அவரை காவல்துறையினர் சமாதானப் படுத்தி கீழே இறக்கினர்.

இந்த  நிகழ்ச்சியை சில தனியார் தொலைக்காட்சிகள் ஹெலிகாப்டரில் பறந்தபடியே ஒளிபரப்பு செய்து பிரசுரம் செய்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது.

இதுதொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கை நீதிபதி கேப்ரியல் கோரென்ஸ்டீன் விசாரித்து வருகிறார். வழக்கின் விசாரணையை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள  பிரதிவாதி, சிலையின் மீது  எத்தகைய சேதத்தை எற்படுத்தினார் மற்றும் எந்த விதமான ஆபத்தை விளைவிக்க முயன்றார் என்பதை தான் சிலையின் மீது ஏறி  பார்த்த பிறகே தீர்ப்பு வழங்க முடியும் என்றார். இது தொடர்பாக அரசுக்கும் அனுமதி கோரி உள்ளார்.

இந்த வழக்கு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்காக தானும் சிலை மீது ஏறுவேன் அடம்பிடிக்கும் நீதிபதியின் செயல் கேள்விக்குறியாகி உள்ளது.

நீதிபதியின் கோரிக்கையை சுதந்திர தேவி  சிலை அமைந்திருக்கும் நேஷனல் பார்க்கின் சேவை அதிகாரிகள்   அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.