நெல்லை:  சாதி மறுப்பு திருமணத்துக்கு உதவி  பெண் ஆணவக்கொலை

images

தலித் இளைஞரும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதல் திருமணம்  செய்வதற்கு உதவிய பெண், நெல்லையில் சாதி வெறியர்களால் கொல்லப்பட்டார்.

நெல்லையைச் சேர்ந்த தலித்த இளைஞர் விஸ்வநாதனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த த காவேரி இருவரும் கல்லூரி காலத்திலேயே காதலித்து வந்தனர்.

காவேரி குடும்பத்தின் எதிர்ப்பை மீறி மணம் முடித்தனர். இவர்களது திருமணத்துக்கு உதவியவர் விஸ்வநாதனின் சகோதரி கல்பனா ஆவார்.

இதை அறிந்த காவேரி  குடும்பத்தினர்  கல்பனாவின் வீட்டுக்கு வந்து, தங்கள் பெண்ணை வீட்டுக்கு அனுப்பும்படி ரகளை செய்தனர்.  காதல் தம்பதி, தனது வீட்டில் இல்லை என்பதை கல்பனா கூறியிருக்கிறார். ஆனால் அதை நம்பாத காவேரி குடும்பத்தினர்  காவேரியை வெட்டிக்கொன்றனர்.  காவேரி கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.