தன்னை கைவிட்ட காதலனை கொன்று கறிவிருந்து படைந்த பெண் கைது!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைப்பார்க்கும் பெண் ஒருவர் கைவிட்டப்பட்ட தனது காதலனை கொன்று, சமைத்து கறிவிருந்து படைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

rice

மொராக்கோவை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு, ஏற்கெனவே வேலை செய்து வந்த மொராக்கோவை சேர்ந்த 20 வயது வாலிபருடன் அந்த பெண்ணிற்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் சுமார் 7 ஆண்டுகள் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த வாலிபர் தான் மொராக்கோ சென்று தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த அந்த பெண், வாலிபரை தனது வீட்டிற்கு வரவழைத்து தாக்கி கொன்றுள்ளார். அதன்பின்னர், அவரது உடலை துண்டுத்துண்டாக நறுக்கு மிக்சியில் போட்டி கொத்துக்கறியாக்கி உள்ளார்.

அதனை கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பிரசித்தியான மச்பூஸ் (பிரியாணி) செய்து அருகில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் விருந்து படைத்துள்ளார். இந்நிலையில், 3 மாதங்களாக காணாமல்போன அந்த வாலிபரை தேடி அவரது சகோதரர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சமீபத்தில் விசாரிக்க சென்றார். என்னை அவர் பிரிந்து சென்ற பிறகு இங்கு அவர் வந்ததே இல்லை என பதிலளித்த அந்தப் பெண்ணின் நடவடிகையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து தனது சகோதரரை காணவில்லை என்றும் சம்பந்தப்பட்ட பெண்ணின்மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அல் ஐன் நகர போலீசில் புகார் அளித்தார். புகாரை அடுத்து, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கிருந்த மிக்சியில் ஒரு மனிதப்பல் சிக்கி இருப்பதை கண்டனர்.

அந்தப் பல்லை கைப்பற்றி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் புகார் அளித்த நபரின் மரபணுவும், அந்த பல்லுக்குரியவரின் மரபணுவையும் ஒப்பிட்டு பார்த்ததில் அது இறந்த வாலிபர் என்பது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி வாலிபரை கொலை செய்து விருந்து படைத்ததும் போலீசார் விசாரணையில் அம்பலமானது.

விசாரணைக்கு பிறகு அந்த பெண் கைது செய்யப்பட்டார், அவருக்கு மனநல பரிசோதனையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.