டிவிட்டரில் தவறாக கருத்து பதிவிட்ட பெண் – நாசாவின் வேலையை இழந்த சோகம்

தனது டிவிட்டர் பக்கத்தில் ஆபாசமான வார்த்தைகளை பதிவிட்டதன் காரணமாக நாசாவில் வேலைப்பார்க்கும் தகுதியை ஒரு பெண் இழந்துள்ளார். சமூக வளைதளங்களில் தவறான மற்றும் பிறரை வசைப்பாடி கருத்துக்கள் பதிவிட்டால் அந்த நபரை வேலையில் இருந்து நீக்கும் பணியை நாசா கடைப்பிடித்து வருகிறது. இது மற்ற நிறுவனங்களுக்கு முன்னுதாராணமாகவும் உள்ளது.

nasa

நவோமி எச் என்ற பெண் அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி எடுத்து வந்தார். பயிற்சிகள் முடிந்தவுடன் அவருக்கு அங்கேயே வேலை வாய்ப்பு வழங்கப்பட இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அவரின் டிவிட்டர் பதிவினால் நாசாவில் பணிபுரியும் வாய்ப்பை இழந்தார்.

நவோமியின் டிவிட்டர் பதிவை நாசாவின் முன்னாள் பொறியியாளர் ஹோமர் ஹிகம் பார்த்துள்ளார். அவரின் பதிவுகள் மிகவும் கீழ்தரமாக உள்ளதாகவும் ஹோமர் ஹிகம் கூறியுள்ளார். ஹோமர் நாசாவின் ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும், பொறியியாளராகவும் பணியாறி உள்ளார்.

முதலில் அவரை பற்றி முழுமையாக அறிந்திராத நவோமி, மோசமான வார்த்தைகளால் டிவீட் பதிவு செய்துள்ளார். அதன் பிறகு நவோமி மன்னிப்பு கேட்டதாகவும் ஹோமர் தெரிவித்துள்ளார். இதையடுத்து தவறான வார்த்தைகளால் கருத்து பதிவிட்ட நவோமியை பணிக்கு சேர்க்கும் பொறுப்பை நாசா ஆராய்ச்சி மையம் ரத்து செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதை தொடர்ந்து நவோமி தனது டிவிட்டர் கணக்கை ரத்து செய்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-