சென்னை அருகே பெண் மாவோயிஸ்ட் கைது

 

சென்னை:

ர்மபுரி – கிருஷ்ணகிரி  ஊத்தங்கரை வனப்பகுதியில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 14 வருடங்கள் தலைமறைவான  பெண்  மாவோயிஸ்ட்  கைது செய்யப்பட்டார்.

கரூரில் கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்ட்
கரூரில் கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்ட்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வனப்பகுதியில், கடந்த 2002-ஆம் ஈடுபட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஆயுத பயிற்சில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து க்யூ பிரிவு போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் சிவா என்கிற பார்த்திபன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  மேலும் 29 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.  பல மாவோயிஸ்ட்கள் தப்பியோடிவிட்டனர்.

தலைமறைவாக வாழ்ந்து வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகி விவேக் இரண்டு வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர்.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு  கரூரில் சந்திரா, கலா என்ற பெண் மாவோயிஸ்ட்களை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் சென்னை புறநகர் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிகளில் மாறு வேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டதில்,  மணிமங்கலம் அருகே உள்ள எருமையூரில் சந்தேகப்படும் வகையில் பெண் ஒருவர் அங்குள்ள கல்குவாரியில் வேலை செய்வது தெரியவந்தது.

அவரை கைது செய்து விசாரித்தபோது, அவர்தான்  14 வருடங்களுக்கு முன்பு  ஊத்தங்கரை வனப்பகுதியில் நடந்த மோதலின்போது   தப்பி வந்த மாவோயிஸ்ட் ரீட்டா ஜாய்ஸ் மேரி (42) என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூன்று நக்சலைட்டுகளிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.