திண்டுக்கல்:

பழனி மதினாநகரை சேர்ந்தவர் ஜெய்னுப்நிஷா(வயது35). இவர் பழனி அருகில் உள்ள சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக (ஏட்டு) பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
சம்பவத்தன்று பணிமுடிந்து ஆண் நண்பர்களுடன் காரில் வந்த ஜெய்னுப்நிஷா சீருடை அணிந்த நிலையிலேயே மதுகுடித்தார். அப்போது அவருடன் போதையில் இருந்த ஆண்நண்பர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

இந்தக் காட்சி, சமூகவலைதளங்களில் நேற்று முதல் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே ஜெய்னுப்நிஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

மது போதையில், நண்பரிடம் இருந்த செல்போனை வலுக்கட்டாயமாக வாங்கி ஜெய்னுப்நிஷாவே தனது நண்பர்கள் சிலருக்கு அனுப்பியுள்ளார். அதோடு மது போதையில், சில வாட்ஸ்அப் குழுவிலும் பதிந்துவிட்டார்.

இதையடுத்தே வீடியோ வைரலானதாக கூறப்படுகிறது.