ஆண் வேடத்தில் இளம்பெண்களை திருமணம் செய்த பலே பெண் கைது!

நைனிடால்:

ரதட்சணை பணத்துக்காக 25யதான  இளம்பெண் ஒருவர் ஆண் வேடமிட்டு இரண்டு இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடாலில் இந்த ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது அந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக் சமூக வலைதளம் மூலம் இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து வரதட்சணையாக பலலட்சம் ரூபாய் வசூல் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து நைனிடால் போலீஸ் சூப்பரிடென்ட்  ஜன்மிஜே கந்தூரி  கூறியதாவது,  உத்தர்காண்ட் மாநிலத்தின் பிஜினோர் மாநிலத்தில் உள்ள  தாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வீட்டி சென்.

அப்போது பேஸ்புக் வலைதளத்தில் தன்னை ஆணாக சித்தரித்து பதிவு செய்து அதன் மூலம் கடந்த 2013ம் ஆண்டு ஹல்த்வானி காத்கோடம் என்ற இடத்தை சேர்ந்த காமினி என்ற பெண்ணிடம் நட்பை ஏற்படுத்தி உள்ளார்.

‘அவரிடம் தான் அலிகாரை சேர்ந்த பெரும் வியாபாரி என்று கூறி ஏமாற்றி  2014ம் ஆண்டு அவரை திருமணம் செய்து,  அவரிடம் இருந்த 8.5 லட்சம் ரூபாய் டவுரியாகவும் பெற்றுள்ளார்.

இவர் ஆண் இல்லை பெண் என்பது காமினிக்கு தெரியவந்ததும், அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிஷா என்ற மற்றொரு  பெண்ணை ஏமாற்றி  திருமணம் செய்துள்ளார்.

 

இந்நிலையில், முதல் மனைவி, தன் கணவர் ஹரித்துவாரில் உள்ள தன்னுடைய தொழிற்சாலைக்காக பணம் என்று மிரட்டுவதாக காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஸ்வீட்டி புதன் கிழமை கைது செய்யப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில் தான் ஒரு பெண் என்பதை ஸ்வீட்டி ஒப்புக்கொண்டதுடன் மருத்துவ பரிசோதனை யிலும் ஸ்வீட்டி ஒரு பெண் என்பது உறுதியானது.  கைது செய்யப்பட்ட 25வயதான அந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.