ண்டன்

முகநூலில் தீவிரவாத ஆதரவு பதிவு இட்டு தண்டனை பெற்ற ஐந்து குழந்தைகளின் தாய் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

லண்டனின் தென்மேற்குப் பகுதியை சேர்ந்தவர் ஃபர்ஹானா அகமது.  நாற்பது வயதான இவர் கடந்த 2015ஆம் வருடம் முகநூலில் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக சில பதிவுகளை பகிர்ந்தார்.   இவர் தனது பதிவுகளில் பாரிசில் நடை பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை ஆதரித்து பதிவிட்டிருந்தார்.   அத்துடன் ஐ எஸ் பேச்சாளர்கள் பேசிய பல பயங்கரவாத ஆதரவுப் பேச்சுகளையும் பகிர்ந்து உள்ளார்.  இதற்காக கைது செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

அப்போது ஃபர்ஹானா ஐ எஸ் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக சிறை தண்டனை பெற்றார்.   இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் அவர் தனது செய்கைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.   அத்துடன் நீதிபதிக்கு தாயைப் பிரிந்து வாடும் அவர் மூத்த மகன் எழுதிய கடிதமும் நீதிபதிக்கு ஃபர்ஹானா மீது இரக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதனால் நீதிபதி ”ஃபர்ஹானாவின் சிறு குழந்தைகளின் நலத்தைக் கருதியும், அவர் மன்னிப்பு கோரியதாலும் நான் விடுதலை அளிக்கிறேன்.  உங்களுக்கு உங்கள் குழந்தைகளுடன் திரும்ப இணவதே முக்கியம் என நீங்கள் சொன்னதை மதித்து நான் உங்களை உங்கள் குடும்பத்துடன் இணைக்கிறேன்.   மேலும் நீங்கள் தண்டனைக் காலத்தில் நல்ல முறையில் இருந்ததைப் போல இனியும் நல்ல முறையில் வாழ்க்கையை நடத்த வேண்டும்” எனக் கூறி ஃபர்ஹானாவை விடுதலை செய்துள்ளார்.