சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர் பதவி நீக்கம்
பெரம்பலூர்
சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் அரசு வழக்கறிஞர் சித்ரா தேவி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மகளிர் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களாக மைனர் சிறுமிகள்பலாத்கார வழக்கில் சிறுமிகள் அமைதி காத்ததால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும் சம்பவம் நிகழ்ந்து வந்துள்ளது. முதலில் குற்றம் சாட்டிய பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் பிறகு அதை அதிகம் எதிர்க்காமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் 17 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு ஒன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இந்த வழக்கில் பலாத்காரம் செய்தவரே அந்த சிறுமியை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அதனால் அந்த சிறுமி இந்த் அவழக்கில் அமைதியாக இருந்துள்ளார்.
நீதிபதி இது குறித்து அந்த சிறுமியிடம் விசாரித்த போது முதலில் அமைதியாக இருந்த அந்த சிறுமி அதன் பின்னர் தன்னை பலாத்காரம் செய்தவருக்கே அரசு வழக்கறிஞர் சித்ரா தேவி திருமணம் செய்து வைத்ததாகவும், அவர் கூறியபடி தாம் அமைதியாக உள்ளதாக்வும் தெரிவித்துள்ளார். இது நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அத்துடன் சித்ரா தேவி அந்த சிறுமியிடம் பேசிய பதிவும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஒரு நாள் முன்பு அந்த சிறுமிக்கும் பலாத்காரம் செய்தவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அப்போது சித்ரா தேவி இது குறித்து எதுவும் சொல்லாமல் இருக்கும் படி சிறுமியிடம் கூறி உள்ளது பதிவில் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரம் ஓரிரு செய்தி ஊடகங்களில் வெளியாகியது. அதை ஒட்டி தமிழக அரசின் உள்துரைக்கு காவல்துறை அளித்த பரிந்துரையின் படி சித்ராதேவி அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவர் இது போல பல வழக்குகளில் நடந்துக் கொண்டதை பற்றி விசாரணை செய்ய உள்ளதாகவும் உள்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து கூடுதல் துணை செயலர் நிரஞசன் மார்தி, “பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த பல போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள சிறுமிகள் பலாத்கார வழக்கை ஆராய்ந்ததில் குற்றம் சாட்டிய பெண்கள் பிறகு அமைதியாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட குரல் பதிவில் ஒரு வழக்கில் குற்றம் குறித்து அமைதி காக்கும்படி வழக்கறிஞர் திருமதி சித்ராதேவி கூறியது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது தெளிவாகி உள்ளது. அவர் குற்றவாளிகளின் மீது இரக்கம் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவரை அமைதியாக இருக்கச் சொல்லி உள்ளார். இதனால் காவல்துறையின் சிபாரிசை ஏற்று சித்ரா தேவியை பதவி நீக்கம் செய்கிறோம்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.