இஸ்லமாபாத் :
பெண்ணை பலாத்காரம் செய்ய தீர்ப்பளிக்கப்பட்டு, அந்த “தண்டனை”யும் நிறைவேற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம், பாகிஸ்தானில் நடந்துள்ளது.
பாகிஸ்தானின், குஜ்ரத் என்ற இடத்தில் ஒரு நபர் இளைஞன் ஒருவரை அடித்ததாக கூறி பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அந்த பஞ்சாயத்தில், அடிபட்ட இளைஞனுக்கு நியாயம் வழங்குவதாக நினைத்து, அடித்தவரின் இளம் (மைனர்) பெண்ணை அந்த இளைஞன் பலாத்காரம் செய்து கொள்ளலாம் என “தீர்ப்பு” அளிக்கப்பட்டது.
0
அதன்படி அந்த இளைஞன், மைனர் பெண்ணை பலாத்காரம் செய்தார். மேலும் சிலரும் இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டனர். திருமணம் ஆன அந்த பெண் கர்ப்பமாக இருந்தார்.
பலாத்காரம் செய்யப்பட்டதால், மனமுடைந்த அந்த பெண் அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்தார். தீக்காயங்களுடன் லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், “என்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்குமாறு என் கணவரிடம் கூறினேன். ஆனால் அவரோ புகார் அளிக்க முடியாது, அவர்களை அல்லா  பார்த்துக்கொள்வார் என்று கூறினார்.  அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை முடிவை எடுத்தேன்” என்று தெரிவித்தார்.
அந்த பெண்ணின் வாக்குமூலத்தின்படி பஞ்சாயத்து “தீர்ப்பு” வழங்கிய 11 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
தற்போது அந்த பெண், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துவிட்டார்.