லண்டன்:

துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரஷீத் சயிது அல் மக்தும் மகள் ஷேக்கா லத்திபா (வயது 33). இளவரசியான இவர் அமெரிக்க நண்பர் ஹெர்வி ஜாபர்ட் என்பவருடன் சில நாட்களுக்கு முன் கோவா வந்திருந்தார். கடந்த 4ம் தேதி மாலை 4.30 மணிக்கு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் இவர்களை சுற்றிவளைத்து கடத்தி சென்றுள்ளனர்.

இந்த தகவலை லத்திபா வாடஸ் அப் மூலம் தனது தோழிக்கு அனுப்பியுள்ளார். அமெரிக்கா பதிவு எண் கொண்ட ஒரு படகு மூலம் கடத்தி சென்று போது இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார். அந்த படகு இந்திய கடற் எல்லையில் இருந்து 50 மைல் தொலைவில் உள்ளது. துப்பாக்கியால் அவர்கள் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு நடப்பதை பதிவு செய்யுமாறு அவரது தோழி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதன் பின்னர் லத்திபாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

பிரிட்டனை அடிப்படையாக கொண்ட ‘டீடெயிண்ட் இன் துபாய்’ என்ற முகமை இளவரசி மாயமானதாக அமெரிக்கா, பிரிட்டன், இந்தியாவை சேர்ந்த முகமைகளுக்கு தகவல் அனுப்பியுள்ளது. ஆனால் இது குறித்த தகவல் எதுவும் இந்தியாவில் கிடைக்கவில்லை என்று அந்த முகமை குறிப்பிட்டுள்ளது.

தகவலறிந்த என்டிடிவி செய்தியாளர்கள் இந்திய கடற்கரை பாதுகாப்பு துணை கமாண்டன்ட் அவிநந்தன் மித்ராவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். இது மாதிரியான தகவல்கள் எங்களுக்கு எதுவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 26ம் தேதி லத்திபா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரச்னைகளுக்கு உதவும் ‘டீடெயிண்டு இன் துபாய்’ என்ற சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனமான இந்த முகமையை இமெயில் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அதில்,‘ தனக்கு டார்ச்சர் கொடுக்கப்படுகிறது. எனக்கு உதவி வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை அறிந்தவுடன் முதல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இமெயில் குறித்த அடையாளத்தை லத்திபாவின் தோழி ஒருவர் உறுதி செய்தார்.

தோழி கூறுகையில், ‘‘சகோதரர் ஒருவர் தப்பிச் செல்ல உதவியதற்காக தன்னை சிறைவைத்து துன்புறுத்தியதால் லத்திபா துபாயில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் தப்பிச் செல்ல அமெரிக்காவை சேர்ந்த பிரெஞ்ச் எழுத்தாளர் ஹெர்வே ஜாவ்பெர்ட் என்பவர் உதவி செய்துள்ளார். மார்ச் 5ம் தேதி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கு இந்திய அதிகாரிகள் எப்படி உதவி செய்வார்கள் என்ற சந்தேகமும் அவர்களுக்கு இருந்துள்ளது. அவர்கள் இருவரும் படகு மூலம் துபாயில் இருந்து தப்பிச் சென்றிருக்க வேண் டும்’’ என்றார்.

‘‘அவர்களை இந்திய அதிகாரிகள் விசாரித்து குறிப்புகளை பெற்றுக் கொண்டு அனுப்பியிருக்க கூடும். எனினும் எரிபொருள் குறைவு காரணமாக அவர்கள் நீண்ட தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை. லத்திபாவிடம் இருந்து தான் கடத்தப்பட்டதாக தோழிக்கு வந்த வாட்ஸ் அப் தகவலை தொடர்ந்து அனைத்தும் கையை மீறி சென்றுவிட்டதை உணர்ந்தோம்’’ என்று டீடெயிண்டு இன் துபாய் நிறுவனம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த முகமை அமெரிக்காவை சேர்ந்த லத்திபாவின் வக்கீலை தொடர்பு கொண்டது. அதன் பின்னர் அந்த வக்கீல் லத்திபான வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் துபாய் பிரதமரும், தனது தந்தையுமானவர் தன்னிடம் தவறாக நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் போலீசார் கூறுகையில்,‘‘ லத்திபா மாயமான விவகாரம் குறித்து தேசிய குற்ற முகமைக்கும், சர்வேச இன்டர்போலுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்று தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்பு தான் தாவூத் இப்ராகிமின் உதவியாளர் பாரூக் தாக்லா துபாயில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டார். இந்நிலையில் துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரஷீத் சயிது அல் மக்தும் மகள் சேக்கா லத்திபாவுக்கு இந்தியாவில் இது போன்றதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.