நடுத்தெருவில் ஆபாசம் : பெண்ணுக்கு இரண்டு நாள் ஜெயில்

 

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் இரண்டு ஆண்களும், மூன்று பெண்களும் நடுத்தெருவில் ஒருவரை ஒருவர் ஆபாசமான முறையில் தொட்டுக்கொண்டு முகம் சுளிக்க வைத்தனர்.

ரோந்து சென்ற போலீசார் 5 பேரையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

முசாபர்நகர் ஜுடிசியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

ஆபாச நடத்தையில் ஈடுபட்ட 30 வயது பெண்ணுக்கு 2 நாட்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதம் கட்ட தவறினால் மேலும் 7 நாட்கள் ஜெயிலில் இரூக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய நான்கு பேர் மீது தனியாக விசாரணை நடந்து வருகிறது.

– பா. பாரதி