ஜூன் 14 ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அன்று, முகக்கவசம் அணிந்த அடையாளம் தெரியாத ஒரு பெண் அவரது கட்டிடத்தில் சென்றதைக் காட்டும் பல படங்களும் வீடியோக்களும் ஆன்லைனில் வெளிவந்துள்ளன.

இப்போது, ​​ சுஷாந்தின் வீட்டில் காணப்பட்ட அந்த மர்ம பெண் ரியா சக்ரவர்த்தியின் (Riya Chakraborty) சகோதரர் ஷோவிக்கின் தோழி ஜமீலா என்பது தெரியவந்துள்ளது.

அந்த இடத்தில் இருந்த போலீஸ் குழு அவரை நடிகரின் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. மேலும் அவர் வீட்டு பணியாளர்களை சந்தித்த பின்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார் என தெரிய வந்துள்ளது.

தற்போது சுஷாந்த் மற்றும் ரியாவின் இன்ஸ்டாகிராம் அகௌண்டுகளில் உள்ள ஒரு குரூப் ஃபோட்டோவில், மற்ற சிலருடன் ஷோவிக் மற்றும் ஜமீலாவும் காணப்படும் புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது .

https://www.instagram.com/p/BxBpCojHhsG/

சுஷாந்தை தற்கொலைக்குத் தூண்டியதாக சுஷாந்தின் குடும்பத்தினர் ரியா மீது FIR பதிவு செய்துள்ளனர். ரியா, ஷோவிக் மற்றும் அவர்களது தந்தை இந்திரஜித் சக்ரவர்த்தி ஆகியோர் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கிற்காக பல முறை அமலாக்க இயக்குநரகம் (ED) முன் ஆஜரானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.