கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துசெல்வதை தடுத்த ‘ஆடி’ கார் பெண்!!

ர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும்போது ஏற்பட்ட சிறு உரசல் காரண மாக, அவர்களது கார் சாவியை பிடுங்கி அவர்களை மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்தார்  ஒரு ‘ஆடி’ கார் பெண் ஒருவர்

ஒரு அதிர்ச்சி வீடியோ இப்போது  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காஜியாபாத், மோடி நகர் இடையே NH8  காரில் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவ மனைக்கு கூட்டிகொண்டு செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக  வேறு ஒரு கார் மீது மோதி சிறு விபத்து ஏற்படுகிறது.

அதைத்தொடர்ந்து ‘ஆடி’ சொகுசு காரில் வந்த ஒருவர், கர்ப்பிணி பெண் வந்த காரின்  சாவியை, வண்டியில் இருந்து எடுத்து சென்றுவிடுகிறார். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

காரில் டிரைவர் சீட்டுக்கு  அடுத்த சீட்டில் காரின் முன்பகுதியில்  அந்த பெண்மணி தனியாக உட்கார்ந்திருக்கிறார்.

அவருடைய கணவரும், மற்றவர்களும் அந்த ஆடிக்கார் பெண்மணியிடம் இருந்து கார் சாவியை வாங்க முயற்சி செய்கிறார்கள்.

கர்ப்பிணியின் கனவர் அவரிடம் காரின் சாவியை கெஞ்சி கேட்கிறார். ஆனால், அந்த பெண் சாவியை கொடுக்க மறுத்து தகராறு செய்கிறார்.

இதை பார்த்த மற்றவர்களும், பொதுமக்களும் சாவியை கொடுக்கும்படி அந்த பெண்ணிடம் கேட்கின்றனர்.

அந்த பெண் உடன்படவில்லை. அதன் காரணமாக கோபமடைந்த பொதுமக்கள் அந்த பெண்ணை தாக்க முயற்சிக்கும் நிலை உருவாகிறது.

இதையடுத்து அந்த பெண் கார் சாவியை ரோட்டில் தூக்கி எறிந்துவிட்டு காரில் ஏறி சென்று விடுகிறார். சாவியை தேடி எடுத்துகொண்டு அந்த நபர் தனது  கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார்.

https://youtu.be/LIqEkvdeF9E