இந்தோனேசியா : பெண்ணுக்கு பொதுமக்கள் முன்னிலையில்  பிரம்படி

கார்த்தா

ந்தோனேசியாவில் பல குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை தரப்பட்டது.

இந்தோனேசியாவில் மிகவும் தீவிர சட்டங்கள் உள்ளன.   அந்த நாட்டின் சட்டங்களின் படி மது அருந்துவது, மது விற்பனை செய்வது,  திருமணத்துக்கு முந்திய ஆண் பெண் உறவு,  ஓரினச் சேர்க்கை ஆகியவை பெரிய குற்றங்களாகும்.    இத்தகைய குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்தோனேசிய சட்டப்படி இத்தகைய குற்றங்கள் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான பல குற்ற சம்பவங்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு 21 வயது திருமணமாகத பெண் தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.   அந்தப் பெண்ணுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி  தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கில் ஒரு கிறுத்துவ பாதிரியார் மது விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.    அவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.