டில்லி

னது உயர் அதிகாரி மீது பொய்யான பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு டில்லி உயர்நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.

பணியாளர் காப்பிட்டு கழகத்தில் பணி புரிந்து வரும் ஒரு பெண் அதிகாரி தனது ஆண் உயர் அதிகாரி மீது அந்த துறை தலைவரிடம் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது உயர் அதிகாரி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் தன்னை பற்றி விரும்ப தகாத வகையில் விமர்சனம் செய்து வருவதாகவும் கூறி இருந்தார்.

எனவே காப்பிட்டுக் கழகம் இந்த புகாரை விசாரிக்க உத்தரவிட்டு உள்விசாரனைக் குழு ஒன்றை அமைத்தது. அந்த உள்விசாரணைக் குழு இந்த புகாருக்கு தேவையான ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை என தீர்ப்பு அளித்து இருவரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினால் திருப்தி அடையாத அந்தப் பெண் அதிகாரி இதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை 2012 ஆம் ஆண்டு அளித்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜே ஆர் மிதா விசாரணை செய்து வந்தார். நேற்று முன் தினம் அவர் அளித்த தீர்ப்பில், “பெண் அதிகாரி அளித்த பாலியல் புகாருக்கு தேவையான எவ்வித ஆதாரமும் உள்விசாரணைக் குழு மற்றும் டில்லி உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்படவில்லை. இதனால் இந்த புகார் பொய் புகார் என்பது உறுதி ஆகி உள்ளது. எனவே உள்விசாரணைக் குழுவின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் பொய்ப் புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.