கருகலைப்பில் பெண் பலி…தனியார் டாக்டர் கைது

சேலம்:

கருக்கலைப்பு செய்ததில் பெண் பலியானதை தொடர்ந்து டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த லட்சுமி என்பவருக்கு தனியார் மருத்துவமனையில் கரு கலைப்பு செய்யப்பட்டது. கருகலைப்பு செய்ததும் லட்சுமி திடீரென உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப் பதிவு செய்து டாக்டர் செல்வம்பாளை கைது செய்து அவரது ஸ்கேன் மையத்திற்கும் சீல் வைத்தனர்.