டில்லியில் கள்ளச் சாராயத்தை எதிர்த்த பெண் மானபங்கம்!!

டில்லி:

டில்லியில் கள்ளச்சாராயத்துக்கு எதிராக போராடிய பெண் ஆர்வலரை தாக்கி நிர்வாணமாக இழுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

இச்சம்பவத்தில் அந்த பெண் ஆர்வலர், சக ஆர்வலர்களுடன் இரவு நேரத்தில் கள்ளச்சாராயக் கடைகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்தனர். டில்லி மகளிர் ஆணையத்தில் தன்னார்வத் தொண்டராக அந்த பெண் உள்ளார். நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் புகாரை போலீசார் மறுத்துள்ளார்ர்.

‘‘சட்டவிரோத மதுக்கடைகளை எதிர்த்து போராடியதால் என்னை தாக்கி நிர்வாணப்படுத்தினர்’’ என்று பாதிக்கப்பட்ட அந்த பெண் தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘‘அந்த பெண்ணின் உடலில் இரும்புக் கம்பியால் அடித்ததற்கான அடையாளங்கள் இருந்தது’’ என்று மகளிர் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராய வியாபாரிகள் அவரை தாக்கியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலை தளங்களில் இந்த விவகாரம் பெரிய அளவில் விவாத பொருளானது. இதனால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.