பல்கேரியாவின் நாஸ்டிராடோமஸ் என அழைக்கப்பட்டவர் பாபா வாங்கா . இவரது இயற்பெயர் வங்கேலியாபாண்டேவா டிமிட் ரோவா . இவர் 1911ம் ஆண்டுஜனவரி 31ம் தேதிபிறந்தவர்.

baba(1)
பல்கேரியாவில் உள்ள பெட்ரிச்சில் வாழ்ந்து வந்த அவர் 1996 ஆகஸ்டில் மறைந்தார்.
இவரது 12 வயது வரை சாதாரணமாக நகர்ந்த இவரது வாழ்வை ஒரு சூறைக்காற்று புரட்டிப் போட்டது.

baba-vanga-3

அதில் தூக்கிவீசப்பட்ட வங்கேலியாவின் கண்பார்வை பாதிக்கப்பட்டது. சிகிச்சை எதுவும் பலனலிக்காமல் கண் பார்வையை இழந்தார்.
இவரது பெற்றோரின் கூற்றுப்படி, சூறைக்காற்றினால் தூக்கிவீசப்பட்ட இவரை சிலநாட்களுக்குப் பிறகு மீட்டபோது  கண்களில் குப்பை மற்றும் தூசிகள் படர்ந்திருந்தன.
தூக்கிவீசப் பட்ட ஆரம்ப நாட்களில் தனக்கு பார்வை இருந்ததாகவும், தனக்கு இயற்கை மக்களின் துயர் போக்கவும், எதிர்காலத்தை கணிக்கவும் சக்தியை வழங்கியதாகவும் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
நாளடைவில் இவருக்கென ஒரு பக்தர் கூட்டம் சேர்ந்தது.
இவரைப் பல்கேரிய அரசர் மூன்றாம் போரிஸ், இரண்டாம் உலகப் போரின்போது சந்தித்தார். பின்னாளில் இவர் பல்கேரியன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசகராகவும் பணியாற்றினார். தங்களின் சுயலாபத்திற்காகச் சிலர் இவரைப் பயன் படுத்திக் கொண்டனர் என்றும் கூறப்படுவதுண்டு.
இவரது பக்தர்களின் நம்பகத்தன்மையை பெறுவதற்காக இவர் பல்கேரிய ரகசிய துப்பறியும் நிறுவனத்தின்உதவியைப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டும் உள்ளது.
ஆனால் இவரை உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து வந்தனர். இத்தனைப் பேரைப் பற்றி உளவு பார்க்க எந்தவசதியும் அக்காலத்தில் இல்லை.
இவரது பக்தர்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகளும் அடக்கம்.
சில அரசியல்வாதிகளுக்குக் கணிப்புகளைத் திரித்துக் கூற நிர்பந்திக்கப்பட்டார் எனவும், இவரது வீடு வேவு பார்க்கப்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர்.
இவரது புகழ்பெற்ற கணிப்புகள்:
தனது 50 வருடப் பணியில் பாபா வாங்கா நூற்றுக்கணக்கில் ஆருடங்களைத் தெரிவித்துள்ளார். எனவே இவர் பால்கனின் நாஸ்டிராடாமஸ் என அழைக்கப்படுகின்றார்.
சில கண்ணுக்குப்புலப்படாத சக்திகள் தன்னிடம் மக்கள்குறித்த தகவல்களைத் தெரிவிப்பதே தன்னுடைய திறமைக்குக் காரணம் என இவர் கூறிவந்தார்.
இவரது பக்தர்கள் இவர் 2004ம் ஆண்டு சுனாமியை கணித்ததாகத் தெரிவிக்கின்றனர்.
ஒரு பல்கேரிய பேராசிரியர் இவர்குறித்து ஆய்வு செய்து, இவரது பக்தர்களிடம் ஒரு தபால் கடிதம் கொடுத்துப் பாபாவின் கணிப்பு நிகழ்ந்ததா என்று கேட்டு இருந்தார். கடிதம் மட்டுமில்லாமல், பாபா பேசியதை டேப்பில் பதிவும் செய்து ஆய்வு செய்தனர்.  அதில் 80% பேர் பாபா சொன்னது 100% சரியாக நடந்ததாகக் கடிதத்தில் பதில் கூறி இருந்தனர். ஒரு தலைசிறந்த  வரலாற்று ஆசிரியர் இவரை சந்தித்தபோது, ஆசிரியருக்கே தெரியாத பல விசயங்களையும், 12 நூற்றாண்டில் பல்கேரியாவின் நடந்த சம்பவங்கள் குறித்து சரியாகக் கூறி அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
பல்வேறு விஞ்ஞானிகளும் இவரை ஆய்வு செய்து ஆச்சரியமடைந்துள்ளனர்.

baba -obama

இவர் தனது கணிப்புகளை இலைமறைக் காயாகவே தெரிவித்து வந்தார். தான் முழு விவரத்தைக் கூறினால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்து உடனே சாகத் துணிந்துவிடுவார்கள். எனவே துயரச் செய்திகளை தாம் மேம்போக்காக மட்டுமே தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

baba 2016
இவர் சிரியாவில் நடந்து வரும் இஸ்லாமிய அரசின் தோற்றத்தையும் சரியாகவே கணித்திருந்தார்.
2016 ஆண்டு ஐரோப்பாவை முஸ்லீம்கள் படையெடுத்து ஆக்கிரமிப்பார்கள் என்றும் இவர் கணித்து இருந்தது தற்பொழுது அந்நாட்டில் மக்கள் பேசும் தலைப்பாகி உள்ளது.

இவர் கூறி நிகழ்ந்தவை, நிகழ இருப்பவை என்று ஆண்டுகள் குறிப்பிட்டு இணையத்தில் பல தகவல்கள் உள்ளனர். அவற்றை அவரது ஆதரவாளர்கள் மறுக்கின்றனர். இவரது ஆதரவாளர்கள் இவர் வருடம் குறிப்பிட்டு எந்த கணிப்பையும் தெளிவாகக் குறிப்பிடுவது கிடையாது. ரகசியக் குறியீடு போன்று குறிப்பால் மட்டுமே நிகழ இருப்பதை தெரிவிப்பார் என்றும் கூறுகின்றனர்.

இவர் சரியாகக் கணித்தவை சில:
-இரண்டாம் உலகப் போர் துவக்கம் மற்றும் அதன் விளைவுகள்
-மூன்றாம் போரிஸ் மரண தேதி.
-லெபோனன் 1968 கலவரம்
-நிகாரகுவா 1979 போர்
-சைப்ரஸ் முரண்பாடு 1974
-இந்திராகாந்தி தேர்தல் வெற்றி மற்றும் அவரது மரணம்
-சோவியத்தின் வீழ்ச்சி
-யூகோஸ்லேவியா பிளவு
-கிழக்கு மேற்கு ஜெர்மனி ஒருங்கிணைப்பு
-போரிஸ் எல்ட்ஸின் தேர்தல் வெற்றி
-ஸ்டாலின் மரணம்
-இரட்டை கோபுரத் தாக்குதல்
-அமெரிக்காவின் 44வது அதிபர் கறுப்பர்.
-சிரியாவில் முஸ்லிம் ஆட்சி

இவர் மறைந்து விட்டாலும் இவர் கூறிச் சென்ற ஆருடங்கள் மக்களுக்கு இவரை நினைவுப் படுத்திகொண்டே இருக்கும்.