கால்பந்து நட்சத்திரத்தின் மீதான வன்புணர்வு வழக்கு வாபஸ்

லாஸ் வேகாஸ்: போர்ச்சுகல் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கேதரின் மயோர்கா என்ற பெண், கடந்த 2009ம் ஆண்டு லாஸ் வேகாஸ் ஹோட்டலில் வைத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை பாலியல் வன்புணர்வு செய்தார் என்று புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரை அவர் அளித்தது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்.

ஆனால், தற்போது அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால், இருதரப்புக்கும் இடையில் ஏதேனும் சமரசம் ஏற்பட்டுள்ளதா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

தற்போது 34 வயதாகும் ரொனால்டோ, தன்மீதான குற்றச்சாட்டை வன்மையாக மறுத்திருந்தார். இவர், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மேட்ரிட் அணியின் முன்னாள் வீரர் என்பது நினைவிருக்கலாம்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-