ஆதார் இல்லாததால் அவலம் : உ பி மருத்துவமனை வாசலில் குழந்தை பெற்ற பெண்

 

ஜான்பூர், உ.பி.

த்திரப் பிரதேச மருத்துவமனையில் ஆதார் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை அனுமதிக்க மறுத்து அவருக்கு மருத்துவமனை வாசலில் குழந்தை பிறந்துள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் மருத்துவமனையில் அடுத்தடுத்து ஏதேனும் நிகழ்வுகள் நடந்துக் கொண்டு வருகின்றன.  கோரக்பூரில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக ஒரே தினத்தில் போன வருடம் பல குழந்தைகல் உயிரிழந்தன.   அதைத் தொடர்ந்து பல மருத்துவ மனைகளில் நடக்கும் முறைகேடுகள் பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

உத்திர பிரதேசம் ஜான்பூரில் உள்ள மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவரது உறவினர்கள் பிரசவத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.   ஆனால் அந்தப் பெண்ணிடம் ஆதார் அட்டையும், வங்கிக் கணக்கும் இல்லை.   அதனால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர்.   உறவினர்கள்  கெஞ்சியும் ஒன்றும் பயனில்லாததால் அந்தப் பெண்ணை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணுக்கு அப்போது அந்த மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது.   நடைபாதையில் பிரசவித்து ஒரு மணி நேரம் ஆன பிறகும் கூட மருத்துவமனை ஊழியர்கள் அவரை கவனிக்கவில்லை.   சில சமூக ஆர்வலர்கள் அந்த வழியே செல்லும் போது அதைக் கண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   அதன் பிறகு பிறந்த குழந்தையும் அந்தப் பெண்ணும் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Woman without aadhaar gave birth a child at hospital enterance
-=-