டெண்டர் வழங்க கமிஷன் கேட்ட பெண் எம்.எல்.ஏ.?: வைரலாகும் ஆடியோ..

--
பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ

கோவில் பராமரிப்புப் பணிகளுக்கான டெண்டர் எடுப்பதற்கு, தன்னை வந்து பார்க்க வேண்டும் என மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல் ஏ பரமேஸ்வரி கூறியதாக தொலைபேசி உரையாடல் ஒன்று சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருச்சி மாவட்டம் உள்ள கோயில்களுக்கு 22 லட்சம் ரூபாய் செலவில் மின்விளக்கு கோபுரம் அமைக்க டெண்டர் விடப்பட்டது.

இந்த பணிகளை செய்ய திருச்சியில் உள்ள மணிகண்டன் என்ற ஒப்பந்ததாரர் விண்ணப்பித்து உள்ளார். ஒப்பந்ததாரரை கோயிலின் செயல் அலுவலர் குமரதுரை, மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரி முருகனை பார்த்து விட்டு வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து ஒப்பந்ததாரர் மணிகண்டன், மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரியிடம் தொலைபேசியில் பேசியபோது, நீங்கள் டெண்டர் போட்டால் என்னிடம் கேட்க வேண்டும் என்றும், நேரில் வந்து தன்னை பார்க்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நன்றி: புதிய தலைமுறை

https://www.youtube.com/watch?v=AqGeBxbc8W4&feature=youtu.be