கர்நாடகா மாநிலத்தில் கால்புர்கி பகுதியில் உள்ள நான்கு மருத்துவமனைகள் உரிமம் இல்லாமல் இயங்கிவந்ததும் லம்பானி மற்றும் தலித் சமூகத்திலிருந்து கிட்டத்தட்ட 2,200 பெண்களின் கருப்பையை நீக்கி முக்கிய மோசடியில் ஈடுபட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பை நீக்க மோசடி கடந்த ஆகஸ்ட் 2015 இல் வெளிவந்த்து. அப்போது, சுகாதாரத் துறை நடத்திய விசாரணை அறிக்கையின்படி அடிப்படையில், நான்கு மருத்துவமனைகளின் உரிமங்கள் அக்டோபர் 2015ல் ரத்து செய்யப்பட்டன.ஆனாலும், தொடர்ந்து அந்த மருத்துவமனை இயங்கி வந்த்து.தற்போது ஆயிரக்கணக்கான பெண்களும் மற்றும் ஆர்வலர் குழுக்களும் இந்த மருத்துவமனைகளை மூட வேண்டும் என அரசிடம் போரிக்கை வைத்துப் போராடிவருகின்றனர்.
திங்களன்று கலபுரகி துணை ஆணையாளர் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்ட பெண்கள் அமைப்பினர், விமொச்சனா அமைப்பினர், மாற்று சட்டம் கருத்துக்களம் அமைப்பினர், ஸ்வராஜ் அபியான் அமைப்பினர் அந்த மருத்துவமனைகளை மூட வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.
சுகாதார கமிஷன் நடத்திய விசாரணை அறிக்கை படி, வயிற்று வலி, இடுப்பு வலி, வெள்ளைப்படுதல் போன்ற வியாதிகளுக்கு இந்த மருத்துவமனைகளை அணுகிய பெண்களுக்கு, தேவை இல்லாமல், கருப்பை (கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைகள்) நீக்க அறுவை சிகிச்சை நடத்தப்பட்டன “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வயிற்றுவலியுடன் வரும் பெண்களுக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டு, ஒரு குறுகிய காலத்திற்கு மருந்து வழங்கப்பட்டு, அடுத்தடுத்த வருகைகளில் வயிற்றுவலி குறையவில்லை எனக்காரணம் காட்டி, கருப்பை புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாய் பயம் காட்டி, கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறி ஆபரேஷன் செய்து பணம் பறித்துள்ளனர்” இது ஒரு திட்டமிட்ட மோசடி ஆகும்.” என அறிக்கை அளித்துள்ளது.

நாற்பது வயதுக்குட்பட்ட பெண்களைக் குறி வைத்து, அங்கான்வாடி ஊழியர்கள் உதவியுடன் ஏழைப்பெண்களை “அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
35 கிராமங்களில் 65 பெண்கள் அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், ஒரு அரசு மருத்துவர் தம்து பெயரில் ஒரு தனியார் மருத்துவமனை நடத்தி வந்த்தும், அங்கு இந்த மோசடி நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போன்று 2013ம் ஆண்டு சட்டீஸ்கரில் 2500 பெண்களுக்கு மருத்துவர்களின் தவறான பரிந்துரையின் பெயரில் அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்களுக்குப் பீகார், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.