2005க்கு முன் பிறந்த பெண்களுக்கு சொத்துரிமை உண்டு…..உச்சநீதிமன்றம்

டில்லி:

தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு 2 சகோதரிகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அஷோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு விபரம்…

‘‘வாரிசுரிமைச் சட்டம் 2005ன் படி குடும்ப சொத்தில் மகனுக்கு இருக்கும் அதே உரிமை மகளுக்கும் உண்டு என கூறியுள்ளது. இச்சட்டத்தில் மகளுக்கும் சொத்தில் பங்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மட்டுமே சொத்தில் பங்கு என்று வரையறுக்க இயலாது.

ஒரு பெண்ணுக்கு சொத்தில் பங்கு அளிப்பதை அவர் பிறந்த ஆண்டு தீர்மானிக்க முடியாது. ஒரு தந்தையின் சொத்தில் மகனுக்கு இருக்கும் அதே உரிமை மகளுக்கும் இருப்பதையே அந்த சட்ட திருத்தம் உறுதி செய்கிறது’’ என்று தெரிவித்துள்ளனர்..