சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம்: உச்சநீதி மன்றம் தீர்ப்பு

--

டில்லி:

பரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம் என்று  உச்சநீதி மன்றம்  தீர்ப்பு வழங்கி உள்ளது. பெண்கள் வணக்கத்திற்கு உரியவர்கள்.. அவர்களுக்கு ஆண்களுக்கு  சமமான உரிமை உண்டு என்றும் கூறி உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2006-ல் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

விசாரணையின்போது, ஏன் அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது. வழிபடுவது என்பது அடிப்படை உரிமை; அதைத் தடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்து மதத்தில் இந்தத் தடை உள்ளதா’ உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

இந்த வழக்கு  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திராசூட், இந்து மல்கோத்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இந்த நிலையில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது.அதில் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என்று கூறி உள்ளது.

5 நீதிபதிகளில் 4 பேர் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்று கூறி உள்ளனர்.

அரசியலமைப்பின் 25 வது பிரிவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பொருந்தும் என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது. ஆண்களுக்கு பெண்கள் குறைந்தவர்களோ அல்லது  தாழ்ந்தவர்களோ  கிடையாது. மதத்தின் மரபுவழி நம்புவதை அனுமதிக்க முடியாது. அய்யப்பாவின் பக்தர்கள் ஒரு தனி மத வகுப்பு இல்லை… இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூறி உள்ளது.

நீதிபதி நாரிமன் கூறும்போது, அய்யப்பனை  வணங்குவதில்  அனைத்து வயதினரும் சமமானவர்களே. எனவே, சிலர் கோயிலுக்குள் நுழைவதை தடுக்கும் ஒரு பாலமாக இருக்க முடியாது, அரசியலமைப்பின் 26-ம் பிரிவு பெண்களுக்கு தடைவிதிக்கவில்லை என்றும், பெண்கள் வணக்கத்திற்கு உரியவர்கள்.. அவர்களுக்கு ஆண்களுக்கு  சமமான உரிமை உண்டு என்றும் கூறி உள்ளார்.