குஜராத் நீதிமன்ற 9வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

--

காந்திநகர்:

குஜராத் மாநிலம் லிம்பயாத் பகுதியை சேர்ந்தவர் சில்பா லால்சந்த் சிங் (வயது 27). சில்பாவை அவரது கணவர் கொடுமைப்படுத்தியுள்ளார். இது குறித்து சில்பா போலீசில் புகார் செய்தார். இந்த புகார் மீது இன்று சூரத் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

நீதிமன்றத்தில் ஆஜராக சில்பா லால்சந்த் சிங் நீதிமன்றம் வந்திருந்தார். திடீரென அவர் நீதிமன்றத்தின் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். உடலை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.