பெண்கள் கிரிக்கெட் தோல்வி : பிசிசிஐ அதிகாரிகளை சந்தித்த வீராங்கனைகள்

மும்பை

மீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை ஒட்டி பிசிசிஐ அதிகாரிகளை வீராங்கனைகள் சந்தித்துள்ளனர்.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் மகளிர் கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இந்திய அணி எதிர்ராமல் தோல்வி அடைந்தது. அதை ஒட்டி இன்று இந்திய அணியின் ஒரு நாள் போட்டி அணியின் தலைவி ஹர்மன் பிரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் பிசிசிஐ அதிகாரிகளை சந்தித்தனர். அவர்களுடன் அணியின் மேலாளர் திருப்தி பட்டாசார்யாவும் சென்றுள்ளார்.

இது குறித்து அதிகாரிகளான ராகுல் ஜோகிரி மற்றும் சபா கரிம் ஆகியோர் தனித்தனியே ஒவ்வொருவருடனும் சந்திப்பு நடந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்பதை வெளியிட மறுத்துள்ளனர். போட்டி குறித்த கருத்துக்க்ளை மட்டும் கேட்டதாக சொல்லி உள்ளனர்.

வரும் புதன் கிழமை அன்று இந்த அதிகாரிகள் அணியின் பயிற்சியாளரான ரமேஷ் பொவார் ஐ சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பொவார் இனி பயிற்சியாளராக நீடிக்க மாட்டார் எனவும் அதிகாரபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி