பெண்களே பெண்களை அதிகாரம் செய்கிறார்கள்! ஜோதிகா பேச்சு

 

டிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா. இவர் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.  திருமணத்திற்கு படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு 36 வயதினிலே என்ற படத்தில் நடித்தார். பின்னர்  மகளிர் மட்டும் என்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் ஒன்றில் மீண்டும் நடித்தார். இந்த படங்கள்  பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

இதையடுத்து மேலும் ஒரு சில படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற JFW விருது வழங்கும் விழாவில் மகளிர் மட்டும் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஜோதிகாவுக்கு விருது வழங்கப்பட்டது.

விருதை பிரபல டைரக்டர் பிரயதர்ஷன் ஜோதிக்காவுக்கு வழங்கினார். அதையடுத்து, ஜோதிகா உணர்ச்சி பெருக்குடன் பேசினார்.

அவர் பேசியதாவது,

தனது மகளிர் மட்டும்  படத்தை ஏராளமானோர் பார்த்து, தனக்கு ஆதரவு அளித்த பெண் ரசிகர்களுக்கு நன்றி.  “பெண்கள் பெண்களுக்கு அதிகாரம் செய்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால், எனது வெற்றிக்கு  பின்னால் உள்ள பல பெண்கள் உள்ளனர் என்று கூறினார்.

எனது  சினிமா பயணம் 17 வயதில் தொடங்கியது என நினைக்கிறேன் . என் அம்மா அவள் ஒரு கண்டிப்பான  பெண்மணி, ஒரு நாள்  அவர்  என்னை நோக்கி, ‘ஜோ, நீ இங்கு நிற்க வேண்டும், மக்களை எதிர்கொள்ள வேண்டும், உலகத்தை எதிர்கொள்ள வேண்டும்.’ என்று கூறினார். வாழ்க்கையில் வெற்றி பெற  பணம் தேவை என்றும், பணம்  மட்டுமே குறிக்கோள் என்று எனது  வங்கி சேமிப்பையே அவர் விரும்பினார்.

அப்போத, வாழ்க்கையில் நீ சரியான மனிதரை சந்திக்கவில்லை என்றால்…  உங்கள் தலையை உயர்த்தி, உறவில் இருந்து வெளியேறு என்றும் என்றும் கூறினார்.

இதற்காக எனது அம்மாவுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எனக்கு  சுய மதிப்பையும், சுய மரியாதையையும் கற்றுக்கொடுத்தவர் அவர் என்று நினைவு கூர்ந்தார்.

ஜோதிகாவின் அம்மா சீமா சதனா.  அவர் சாமா கழி என்ற இடத்தில் பிறந்தவர். அவர் முதலாவதாக அரவிந்த் மொரார்ஜி என்ற துணி வியாபாரியை மணம் முடித்தார். பின்னர் அவரை டைவர்ஸ் செய்துவிட்டு, சந்தர் சதனாவை மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்தான் ஜோதிகா.

தன்னை  அவர் ஆண் பெண் என்று வித்தியாசம் பாராட்டாமல் சமத்துவத்துடனே வளர்த்தார் என்று கூறினார்.

மேலும், தனது மாமியார் லக்ஷ்மி சிவகுமாருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

தனது கணவர் நடிகர் சூர்யாவை இளவரசன் போல உயர்த்தி, அவருக்கு ஏற்ற  ராணியாக மாற்ற உதவியதாகவும், அவர்களிடம் இருந்தே குடும்ப பாரம்பரியம், குடும்ப உறவுகள் குறித்து பின்னாலில் கற்றுக்கொண்டதாகவும் பெருமையுடன் தெரிவித்தார்.

மேலும், நான் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள நடிகர் சிவகுமாரும், அவரது மனைவியும் எதிர்ப்பு தெரிவிப்பதாக வதந்தி பரவியதாகவும்,அதேபோல் தான் படங்களில் நடிக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது.   ஆனால், அப்படி ஏதும் இல்லை என்றும், ஆனால் திருமணத்திற்கு பின்பு நான் நடிக்க விரும்பாமல் இருந்தேன் என்றும் கூறினார்.

ஆனால், திருமணத்திற்கு பிறகு, முதல் படமாக 36 வயதினிலே படம்  நடித்ததாகவும், அந்த படத்தில்  ஒரு பெண்ணின் லட்சியம், கனவு குறித்து சித்தரிக்கப்பட்டது. இது பெண்களிடையே  பேசப்பட்டது என்றும்,  இதற்காக தனது நண்பர்கள் சாரா மற்றும் நாச்சிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

ஜோதிகா பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது மகளான தியா, தனது பாட்டியான லட்சுமி சிவாகுமாரின் மடியில் உட்கார்ந்திருந்தார். அவரை பார்த்த ஜோதிகா, தனது மகள் தியாவின்  இனிய சிரிப்புதான் ஒவ்வொரு நாள் காலையிலும் தனக்கு உற்சாகம் அளிப்பதாகவும், அவள் என்னை பெருமைப்படுத்துகிறாள் என்று கூறினார்.

அப்போது அவருக்கு பலத்த கோஷத்துடன் கைதட்டல் கிடைத்தது,

இறுதியாக பேசும்போதுழ,  “அன்பில் வி‘ழு, அன்பில் இருந்துதான் காதல் அதிகரிக்கிறது, கடவுள் நமக்கு ஒரு வாழ்வை அளித்திருக்கிறார், நாம் வாழ வேண்டும், அது நமக்கு சொந்தமானது.

இவ்வாறு அவர் கூறினார்.