அய்யப்பன் கோவில் விவகாரம்: பந்தள அரச குடும்பத்தினர், தந்திரிகளுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை

சபரிமலை:

அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து,  பந்தள அரச குடும்பத்தினர் மற்றும் ஐயப்பன் கோவிலில் பூஜை செய்து வரும் தந்திரிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு  திருவாங்கூர் தேவசம் போர்டு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சு வார்த்தையின்போது சுமூக முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி அளித்து கடந்த மாதம்  (செப்டம்பர் 2017) 28ந்தேதி  உச்சநீதி மன்றம்  பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இது இந்து மக்களிடையே…. குறிப்பாக கேரள மக்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து கேரளா மட்டுமின்றி பல மாநிங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த தீர்ப்புக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், பின்னர் மாநில அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, உச்சநீதி மன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்று கூறினார்.

இதன் காரணமாக கடும் அதிருப்தி அடைந்த பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றம் அய்யபனக்கு பூஜை செய்து வரும் தந்திரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாநில அரசு மற்றும் தேவசம் போர்டின் அறிவிப்பை எதிர்த்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாநில அரசு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

இதற்கிடையில், அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வந்தால்…  என சில அமைப்பினர் மிரட்டி உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று பேச்சு வார்த்தக்கு வருமாறு அரச குடும்பத்தினருக்கும், தந்திரிகளுக்கும் அரசு சார்பில் தேவசம் போட்டு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று நடைபெற உள்ள பேச்சு வார்த்தையின்போது எடுக்கப்படும் முடிவுகளை தொடர்ந்து சபரிமலை விவகாரம், மேலும் பூதாகாரமாகுமா அல்லது புஷ்வானமாகுமா என்பது தெரிய வரும்.

ஐப்பசி தமிழ்மாதம்  தொடங்குவதன் காரணமாக, அய்யப்பன் கோவிலில் வரும்17ம் தேதி நடை  திறக்கப்பட்டு 18ந்தேதி முதல் பூஜை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.